Latestமலேசியா

KL Eco City ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் மாசி பங்குனி மகோற்சவம்

பங்சார், மார்ச்-15-கோலாலம்பூர், பங்சார் KL Eco City-யில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் மாசி பங்குனி மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மார்ச் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை 20-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு இரத ஊர்வலம் நடைபெறவுள்ளது; KL Eco City-யைச் சுற்றி, சுமார் 1 மணிநேரம் இரத ஊர்வலம் இடம்பெறும்.

மறுநாள் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்த ஊர்சவம் நடைபெறும். அதே நாளில் மாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதாக, ஆலயத்தின் தலைமை குருக்கள் ஷக்தி சுப்ரமணியம் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

பக்தர்கள் இந்த மகோற்சவத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு குருக்கள் சிவ ஸ்ரீ குணா கேட்டுக் கொண்டார்.

இந்த திருவிழா வாரம் முழுவதும் தினமும் மாலை 7 மணிக்கு பூஜைகள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!