Latestமலேசியா

KLCC-யில் சட்டவிரோத புகைப்படக்காரர்கள் தாக்குதல்; அங்காடி வியாபாரி காயம்

கோலாலாம்பூர், மார்ச்-25-கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே, சட்டவிரோத புகைப்படக்காரர்கள் கும்பலாகத் தாக்கியதில், பானங்களை விற்கும் அங்காடி வியாபாரி ஒருவர் தலையில் காயமடைந்தார்.

இச்சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.

அக்கும்பல் முதலில் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுடன் தகராறு செய்து, அவர்களைத் தாக்கியதாக, சமூக ஆர்வலர் Mohd Fadli Salleh அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில், சண்டையை விலக்கி விட்டு அவர்களை சமரசப்படுத்த முயன்ற விற்பனையாளர் பின்னர் குறிவைக்கப்பட்டு, பின்னாலிருந்து கும்பலாகத் தாக்கப்பட்டார்.

இதனால் தலையில் கடுமையான காயம் அடைந்து, அவருக்கு 7 தையல்கள் போடப்பட்டன; மற்றொருவருக்கும் காயம் ஏற்பட்டு 2 தையல்கள் போடப்பட்டன.

தவிர, விற்பனை பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!