Latestமலேசியா

வற்புறுத்தி கையெழுத்திடப்பட்ட பிரகடன ஆவணம் செல்லாது – நெகிரி செம்பிலான் முதல்வர்

சிரம்பான், செப்டம்பர் 9 — நெகிரி செம்பிலான் முதல்வர் டத்தோ இஸ்மாயில் லாசிம் (Datuk Ismail Lasim), பரவி வரும் பிரகடன ஆவணத்தில் தாம் விருப்பமின்றியும் வற்புறுத்தப்பட்டும் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த ஆவணம் நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின், குறிப்பிடப்பட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதால், அது செல்லாது, அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் அமல்படுத்த முடியாதது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பாரம்பரியம் தொடர்பான பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு காண சமரசக் குழுவை அமைப்பது குறித்து மாநில அமைச்சரவை நேற்று விவாதித்தது. துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் (Tuanku Muhriz Tuanku Munawir) நெகிரி செம்பிலானின் சட்டபூர்வமான யாங் டி-பெர்துவான் பெசார் என்றும், அவருக்கு முழுமையான ஆதரவையும் விசுவாசத்தையும் இஸ்மாயில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!