Latestமலேசியா

KLIA-வில் RM1.69 மில்லியன் மதிப்பிலான கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு

கோலாலம்பூர், ஜூலை 2 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA தெர்மினல் 1-ல், 1.69 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான கஞ்சாக்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சம்பவத்தை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையமான AKPS முறியடித்துள்ளது.

பயணப்பெட்டிகளை சோதனையிட்டபோது, 21.14 கிலோ எடையுள்ள மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருள் 70,333 பேர் பயன்படுத்தக்கூடிய அளவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

AKPS மற்றும் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு  இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த வெற்றி கிடைத்தது. சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் மேல்  விசாரணைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று AKPS தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!