
செப்பாங், மே-2,
செப்பாங், KLIA 2 விமான முனையத்தில் நேற்று காலை மேல் தளத்திலிருந்து விழுந்ததில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் முன்னதாக அழுதுகொண்டு மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், அவரை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விமான நிலையத்தின் புறப்பாடு (Departure) தளத்திலிருந்து அந்தப் பெண் கீழே விழுந்ததாகத் தெரிகிறது.
உடனடியாக புத்ராஜெயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
27 வயது அப்பெண், இன்று தாயகம் புறப்பட்டிருக்க வேண்டும் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, செப்பாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் எம். ரவி கூறினார்.
இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.



