Latestமலேசியா

KLIA விமான நிலையத்தில் Cuscus விலங்குகள் கடத்தல் முறியடிப்பு

கோலாலம்பூர், மார்ச் 6 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் பப்புவா நியூ கினியாவில் உள்ள பூர்வீக காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டதாக நம்பப்படும் கஸ்கஸ் ( Cussus ) இனத்தைச் சேர்ந்த இரு வனவிலங்குகள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

68 வயதான சந்தேக நபர் தனது பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த விலங்குளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

அந்த நபரின் பொருட்களைக் கொண்ட பயணப் பெட்டியை பரிசோதித்தபோது ​​வனவிலங்குகள் அடங்கிய இரண்டு சிறிய பிளாஸ்டிக் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக Perhilitan எனப்படும் வனவிலங்கு மற்றும் பூங்கா துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம், ( Abdul Kadir Abu Hashim) கூறினார்.

அந்நபர் இந்தியாவைச் சேர்ந்தவர், எனினும் மலேசிய குடியுரிமை பெற்றவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர் திருச்சிராப்பள்ளிக்கு செல்லும் விமானத்தில் ஏற முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!