Latestமலேசியா

LDP டோல் சாவடியில் கோன் எறிந்த சம்பவம்: Axia ஓட்டுநருக்கு எதிராக போலீஸ் விசாரணை

LDP டோல் சாவடியில் கோன் எறிந்த சம்பவம்: Axia ஓட்டுநருக்கு எதிராக போலீஸ் விசாரணை

சுபாங் ஜெயா, பிப்ரவரி 9 – டாமான்சாரா–பூச்சோங் விரைவு நெடுஞ்சாலை (LDP) டோல் சாவடியில், போக்குவரத்து கோனை எறிந்து அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ குறித்து போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில், சிவப்பு நிற Perodua Axia காரை ஓட்டிய ஒருவர், போக்குவரத்து நெரிசல் நிலவிய நிலையில் திடீரென வாகனத்தை நிறுத்தி, மற்றொரு வாகனத்தின் மீது போக்குவரத்து கோனை எறிந்ததாக பதிவாகியுள்ளது என்று சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் Asisten Komisioner Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.

இதுவரை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் போலீசில் நேரில் வந்து புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பதிவு செய்பட்டு மேல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்றும், சம்பவம் குறித்து கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீஸாரை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. விசாரணையை பாதிக்கும் வகையில் எந்தவித ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!