
பத்து உபான், ஜனவரி 17 – பினாங்கு மாநிலத்தின் பத்து உபான் இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகத்தில் எதிர்வரும் ஜனவரி 19 அன்று, மடானி பொங்கல் மற்றும் கலாச்சார விழா நடைபெறவுள்ளது.
தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றுவதோடு, மதச்சார்பற்ற ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் முதன் முறையாக இச்சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தெரிவித்தார்.
15 அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய பொங்கல் பானையை 200 கிலோ மலர்களால் அலங்கரித்து மலேசியா புத்தகத்தில் சாதனை படைக்கும் முயற்சி, 2 கிலோமீட்டார் தூரத்திற்கான 20 மாட்டு வண்டிகள் ஊர்வலம், 300 பேர் பங்கேற்கும் பாரம்பரிய பொங்கல் சமையல் போட்டி, மலர் கட்டும் போட்டி, குத்துவிளக்கு அலங்காரம் மற்றும் உறியடி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை சிறப்பு நிகழ்ச்சிகளாக இடம்பெறவிருக்கின்றன.
Video
இக்கொண்டாட்டத்தில் சந்தேஷ், விகடகவி உள்ளிட்ட இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், பத்து அரசு நிறுவனங்களின் கண்காட்சிகளும் நடைபெறவிருக்கின்றன.
பாரம்பரிய விளையாட்டுகளுடன் பிற்பகல் 2 மணி தொடங்கவிற்கும் இந்நிகழ்சி, இரவு 10 மணி வரை இசை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் என்றார், அவர்.
இந்த விழாவிற்கு பல்லின மக்களும் இலவசமாக கலந்துகொண்டு தங்கள் ஆதரவை அளிக்குமாறு குமரேசன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.