
லஙLகாவி, மே 19 – நாளை நடைபெறவிருக்கும், லங்காவி லீமா கண்காட்சி 2025-திற்காக (Langkawi International Maritime and Aerospace Exhibition 2025), நேற்று, முன்னதாகவே வானத்தில் பறந்து கொண்டிருந்த போர் விமானங்களின் அதிர்ச்சி அலைகளால், அருகாமையிலுள்ள வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த புகார்களை, தமது அமைச்சகம் புறக்கணிக்காது என்று மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் (Datuk Seri Mohamed Khaled Nordin) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் இக்கண்காட்சியின் போது ஏற்பட்ட விளைவுகளையும், தற்போது ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் தமது அமைச்சகம் ஒப்பிட்டு, அதன் காரணங்களை நிச்சயம் ஆராய்ந்து அதற்கான வழிகளை கண்டறியுமென அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் இந்தக் கண்காட்சியில் கலந்துக்கொள்ளும் இந்திய விமானக் குழு (சூர்யா கிரண் Surya Kiran), இந்தியா எதிர்கொண்டிருக்கும் சவால்கள் காரணமாக இம்முறை பங்கேற்கவில்லை என்று காலிட் விளக்கமளித்தார்.
இருந்தபோதும், ரஷ்ய நைட்ஸ் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜூபிடர் அணி உட்பட பல சர்வதேச புகழ்பெற்ற அணிகள் நம் நாட்டு விமானக் காட்சிகளில் பங்கேற்பது உறுதி.
நாளை தொடங்கி அடுத்த ஐந்து நாட்களுக்கு நடைபெறவிருக்கும் 17வது லீமா ’25 தொடக்க விழாவில், உருவகப்படுத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் மற்றும் போர் விமானங்களின் வான் படைப்புகள் இடம்பெறவுள்ளன.