Latestமலேசியா

LPT2 நெடுஞ்சாலையில் கோர விபத்து; குப்புற கவிழ்ந்த காரினுள் சிக்கி இளைஞர் பலி

கெமாமான், அக்டோபர்-26,

திரங்கானு, கெமாமான் அருகே LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், காரோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பஹாங், குவாந்தானிலிருந்து பெரோடுவா மைவி காரில் வந்துகொண்டிருந்த 23 வயது Muhammad Amirul Rizuan Azmi திடீரென கட்டுப்பாட்டை இழந்தார்.

இதனால் சாலையின் இடப்புறத்திலிருந்த இரும்புத் தடுப்பில் மோதி கார் குப்புறக் கவிழ்ந்தது.

நொறுங்கிய காரின் முன் இருக்கையில் சிக்கிக் கொண்ட அவ்விளைஞர், தலையில் பலத்த காயமேற்பட்டு மரணமடைந்தார்.

சடலம், சவப்பரிசோதனைக்காக கெமாமான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!