
கோலாலாம்பூர், பிப்ரவரி-25-3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட நிந்தனைக்குரிய அம்சங்கள் அடங்கிய பதிவுகள் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்படும்.
சினமூட்டும் வகையிலான அத்தகைய உள்ளடக்கங்கள் குறித்து பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெறும் புகார்கள் அடிப்படையில், சமூ ஊடகச் சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்புடன், மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC அதனை நீக்கி வருகிறது.
நீதிமன்றம் செல்ல வேண்டிய விஷயங்களில் போலீஸ் தரப்புடன் MCC ஒத்துழைத்து வருகிறது.
எனவே, இதுபோன்ற விஷயங்களில் MCMC எதுவும் செய்யாமல் அமைதி காப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது என, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தெளிவுப்படுத்தினார்.
கோவில் நிலப் பிரச்னை குறித்து அண்மைய காலமாக சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் Tamim Dahri, Cikgu Chandra போன்றோர், சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரியப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இச்செயல், மக்களிடத்தில் குறிப்பாக 16 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்களின் மனதில் வெறுப்புணைர்வை விதைப்பதாகவும், ஆனால் MCMC நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும், மேலவையில் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் முன்னதாகக் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கையில் துணையமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.



