
ரொம்பின், பிப் 26 – அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் மலேசியாவுக்கு சிறந்த தேர்வு என்பதோடு பிரதமர் 16வது பொதுத் தேர்தலுக்கு பின்னரும் நாட்டை தொடர்ந்து வழிநடத்துவார் என்ற டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸின் (Datuk Seri Nazri Aziz) கருத்தை அம்னோவின் தலைவர் டாக்டர் அகமட் ஸாஹிட்டும் ஆமோதித்துள்ளார்.
அன்வார் மீண்டும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்து, இரண்டாவது தவணையாக பிரதமராக சேவையாற்ற வேண்டும் என அமெரிக்காவிற்கான முன்னாள் மலேசிய தூதர் நஸ்ரி விரும்புவதை தாமும் ஏற்றுக்கொள்வதாக துணைப்பிரதமருமான அகமட் ஸாஹிட் கூறினார்.
அது நஸ்ரிஸின் ஆசை மட்டுமல்ல. Madani அரசாங்கத்தின் மீதான எங்களின் நம்பிக்கையும் அதுவாகும் என இன்று Tanjung Seratusசில்
Felcra Bhdன் கோழிப் பண்ணை திட்டத்தை தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பஹாங் மந்திரிபெசாரும் அம்னோ உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் (Datuk Seri Wan Rosdy Wan Ismail) மற்றும் Felcraவின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜஸ்லான் யாக்கோப் (Datuk Seri Ahmad Jazlan Yaakub) ஆகியோரும் கலந்து கொண்டனர்.