Latestமலேசியா

PLUS நெடுஞ்சாலையில் குடைசாய்ந்த காய்கறி லாரி; ஓட்டுநர் உடல் கருகி மாண்டார்

ஈப்போ, நவம்பர்-12,

ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் இன்று காலை கொள்கலன் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாண்டார்.

காய்கறிகளை ஏற்றியிருந்த அந்த குளிர்ப்பதன லாரி அதிகாலை 3 மணிக்கு மேல் சாலையோரமாக குடை சாய்ந்து, தீப்பற்றியது.

சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புப் படையினர், அதிகாலை 5 மணியளவில் தீயை அணைத்தனர்.

பிறகு முழுவதுமாக எரிந்துபோன 64 வயது ஓட்டுநரின் சடலத்தை மீட்டு, விசாரணைக்காக போலீஸிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!