Latestமலேசியா

PN நடவடிக்கைகள் நிறுத்தம் — RoS-சை நேரில் சந்திக்க உயர்மட்டத் தலைவர்கள் விருப்பம்

கோலாலம்பூர், செப்டம்பர்-26 – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் உயர்மட்டத் தலைவர்கள் சங்கப் பதிவாளர் இலாகாவான RoS-சை நேரில் சந்தித்து விளக்கம் பெற விரும்புகின்றனர்.

PN பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் இதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்கு எதிராக பெர்சாத்து அளித்த புகாரைத் தொடர்ந்து, RoS விளக்கம் கோரும் நோட்டீஸை வெளியிட்டதுடன், பெரிக்காத்தானின் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக RoS அதிகாரிகளுடன் நேரடியாக கலந்துரையாடி, எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண PN தலைமை விரும்புவதாக தாக்கியுடின் கூறினார்.

RoS-க்கு அளிக்கப்படும் விளக்கம் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், PN-னின் பதிவு இரத்துச் செய்யப்படும் சாத்தியத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

எனினும், தற்போதைய நடவடிக்கை PN-னின் பதிவை இரத்துச் செய்ததாக பொருள்படாது என RoS ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

PN-க்கு தனது விளக்கத்தை சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா மாநிலத் தேர்தலும் வருவதால், கொடி மற்றும் சின்னத்தைப் பயற்படுத்துவதில் PN சிக்கலை எதிர்நோக்கும் அபாயமும் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!