Latestமலேசியா

RD Mystic Global & Vanakkam Malaysia – ஊடக லோஜிஸ்டிக் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் MoU

கோலாலம்பூர், நவம்பர்-13, Corporate tourism எனும் நிறுவனங்களுக்கான சுற்றுலா மற்றும் பயண ஏற்பாடுகளை செய்யும் சேவையில் முன்னனி நிறுவனமாக பெயர்பதிக்க வேண்டும் எனும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது RD Mystic Global Travels & Events Sdn Bhd.

தரமான சேவையின் வழி வாடிக்கையாளர் நிறுவனங்களை கவர்வதை தனது முக்கிய வணிக இலக்காக கொண்டும் செயல்படுகிறது இந்த நிறுவனம்.

அந்த வகையில் வணக்கம் மலேசியாவுடன் இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை (MoU) கையெழுத்திட்டுள்ளது.
வணக்கம் மலேசியாவின் கள பணிகளுக்கான போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்து தருவது இந்த புரிந்துணர்வின் நோக்கமாகும்.

வணக்கம் மலேசியா சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் எம். தியாகராஜன் முத்துசாமியும், RD Mystic Global சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் தீபன் மேனனும் அதில் கையெழுத்திட்டனர்.

முன்னணி தமிழ் ஊடகமான வணக்கம் மலேசியா விரிவான மற்றும் விரைவான களப்பணிகளில் ஈடுபட்டுள்ளதால், வணக்கம் மலேசியாவுக்கு தங்களுடைய சேவையின் தரத்தை பலப்படுத்தவும் பலர் அறியவும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறது RD Mystic Global Travels & Events நிறுவனம்.
இந்த ஒத்துழைப்பு இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் என்பதோடு இந்திய தொழில்முனைவர்களை முன்னிலைப் படுத்தும் ஒரு முன்னெடுப்பு எனவும் வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குனர் தியாகராஜன் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த ஒத்துழைப்பு வெறும் லோஜிஸ்டிக் தோழமையாக இல்லாமல், நீண்ட காலத்தில் சுற்றுலா மற்றும் ஊடகத் துறைகள் இணைந்து வளர்ச்சியடையும் சூழலை உருவாக்கும் முயற்சியாகும் என தீபன் மேனன் கூறினார்.

வணக்கம் மலேசியா மற்றும் RD Mystic Global Travels & Events நிறுவனத்தினுடனான இந்த ஒத்துழைப்பு இரு நிறுவனங்களுடைய சேவைகளை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலும் அணுக்கமாக கொண்டு போய்ச் சேர்க்க உதவுமென பெரிதும் நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!