
RM1.11 பில்லியன் முதலீட்டில் மோசடி; MACC சோதனைக்கும் கைதுக்கும் தயார்- ரஃபிசி சூளுரை
புத்ராஜெயா, பிப்ரவரி-13,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவருடன் தொடர்புடைய RM1.11 பில்லியன் முதலீட்டு ஒப்பந்தத்தை தீவிரமாக விசாரித்து வருகிறது.
PERKASA உள்ளிட்ட 3 அரசு சாரா அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் விசாரணைத் தொடங்கியுள்ளது.
நிதி முறைகேடு, ஆதாய முரண், மற்றும் அமைச்சின் அனுமதி அதிகார மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த ஒப்பந்தம் தொடர்பான டெண்டர் பேச்சுவார்த்தைகளும் அனுமதியும், நிதியயைச்சு, MITI எனப்படும் முதலீடு,வாணிபம், தொழில்துறை அமைச்சு போன்ற அமைச்சுகளின் கவனத்திற்கு செல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.
சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும், அமைச்சின் மூத்த அதிகாரிகளுக்கும் இதில் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து ஆவணங்களும் பரிசீலிக்கப்படும் என்றும், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் அல்லது நம்பிக்கை மீறல் உள்ளதா என விசாரணை நடைபெறும் என்றும் MACC துணை ஆணையர் டத்தோ ஸ்ரீ Ahmad Khusairi Yahaya தெரிவித்துள்ளார்.



