
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-12, “பினாங்கு கெடாவுக்குச் சொந்தம்” என்ற கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோரின் பேச்சுக்கு, “நீதிமன்றத்தில் சந்திப்போம்” என பதிலளித்துள்ளார் பினாங்கு முதல்வர் Chow Kon Yeow.
பினாங்கு மீதான உரிமை தொடர்பில் கெடா அரசு சட்டக்குழுவை அமைத்து வழக்கு தொடரத் தயாராக இருப்பதாக சனுசி நேற்று அறிவித்திருந்தார்.
எனினும் கெடா 3 ஆண்டுகளாக இதே பிரச்னையை எழுப்பி வருவதாகவும், ஆனால் பினாங்கு இன்னும் எந்த முறையான கோரிக்கையையோ அல்லது மனுவையோ பெறவில்லை என்றும் Kon Yeow கூறினார்.
கிடைத்தவுடன் மாநில சட்ட அலுவலகம் ஆலோசனை வழங்கும் என்றார் அவர்.
கெடா சுல்தான் சுல்தான் சலேஹுடின் சுல்தான் படில்ஷா இந்த விவகாரத்தை வெளிப்படையாக தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சனுசி முன்னதாகக் கூறியிருந்தார்.
2021-ஆம் ஆண்டில், கெடா அரசாங்கம் பினாங்கு தீவு மற்றும் செபராங் பிறையின் “குத்தகைக்கு” மத்திய அரசிடமிருந்து RM100 மில்லியனைக் கோரியது; 1786 முதல் அந்தத் தொகை மறு மதிப்பீடு செய்யப்படவில்லை என அது வாதிட்டது.
இந்நிலையில் பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் Wong Hon Wai, 200 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பிரச்னையில் எதற்காக சனுசி சட்ட நடவடிக்கை எடுக்கிறார் எனக் கேள்வி எழுப்பினார்.
சனுசியின் பணக் கோரிக்கை “பயனற்றது” என்றும் அவர் சாடியிருந்தார்.



