
கோலாலம்பூர், ஜூலை-30- வெளிநாட்டு ஆண்களுக்கு வெறும் 50 ரிங்கிட் கட்டணத்தில் அலுவலக நேரத்திலேயே பாலியல் சேவை.
கோலாலம்பூர் Jalan Tun Tan Siew Sin பகுதியில் இயங்கி வரும் 2 விபச்சார விடுதிகளின் அந்நடவடிக்கை, குடிநுழைவுத் துறையின் சோதனையில் அம்பலமானது.
வழக்கமான அலுவலக நேரமான காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை, கடை வீட்டின் மேல்மாடியில் இந்த ஒழுங்கீனச் செயல் அரங்கேறி வந்துள்ளது.
பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் 14 பெண்கள் உட்பட 25 வெளிநாட்டினர் கைதாகினர். அவர்கள் இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
விபச்சார விடுதிகளின் பாதுகாவலர்களாக செயல்பட்டு வந்த 2 உள்ளூர் ஆடவர்களும் கைதாகினர். அனைவரும் பல்வேறு குடிநுழைவுச் சட்ட மீறலுக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.