
கோலாலம்பூர், மார்ச்-2-RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் நிலையாக வைத்திருக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும்.
ஆனால் அதற்கு தம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
BUDI MADANI RON95 மானியத் திட்டத்தின் கீழ், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் விலையை நிலையாக வைத்திருக்கவே அரசாங்கம் விரும்புகிறது.
ஆனால், உலக எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை போன்ற காரணங்கள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதை அவர் விளக்கினார்.
எனவே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்கள், மலேசியாவில் பெட்ரோல் விலையை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
என்றாலும், மக்களின் நலனை பாதுகாக்க அரசு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
தற்போதைக்கு, RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் தொடருகிறது.



