
கோலாலம்பூர், ஜூலை 21 – RON95 மானியத்தை இலக்காகக் கொண்ட அமலாக்கங்களை அரசாங்கம் இன்னும் செம்மைப்படுத்தி வருகின்றது என்றும், இதனால் அது ஒட்டுமொத்த மக்களையும் அது பாதிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் மானியங்களை இலக்காகக் கொண்ட கொள்கைகள், விற்பனை மற்றும் சேவை வரியின் (SST) வரம்பை விரிவுபடுத்திய பிறகு, சரிசெய்தல் மற்றும் மறுபரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்று பகிரப்பட்டுள்ளது.
மானியத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு முன்னர் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தாலும், மக்களை மேலும் சுமைப்படுத்தாமலிருக்க அரசாங்கம் அந்த திகதியை ஒத்திவைத்துள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், எந்தவொரு பொருளாதாரக் கொள்கை மாற்றங்களும் அவசரமாக செயல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.