Latestஉலகம்

Stanford பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: சுந்தர் பிச்சை பேசத் தொடங்கியதும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள்

கலிஃபோர்னியா, ஜூன்-15 – அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற Stanford பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், கூகள் நிறுவனத்தின் இஸ்ரேல் உடனான வர்த்தகத் தொடர்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Stanford பல்கலைக்கழகத்தின் 135-ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கூகள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மேடைக்கு வந்து உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்த அதிரடிப் போராட்டம் வெடித்தது.

தங்களின் பட்டமளிப்பு அங்கிகளுக்கு மேல் பாலஸ்தீன பாரம்பரிய ‘keffiyeh’ ஆடைகளை அணிந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், “பாலஸ்தீனத்திற்கு விடுதலை” என முழக்கமிட்டவாறே அரங்கிலிருந்து வெளியேறினர்.

இஸ்ரேல் அரசாங்கத்துடன் கூகள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான Project Nimbus என்ற Cloud Computing மற்றும் AI தொழில்நுட்ப ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரியே மாணவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

20,000-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அரங்கில் இந்த வெளிநடப்பு சலசலப்பை ஏற்படுத்திய போதிலும், சுந்தர் பிச்சை தொடர்ந்து உரையாற்றினார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நீடித்து வரும் இந்த மாணவர் போராட்டங்கள், தற்பொழுது பெருநிறுவனத் தலைவர்களின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!