கோலாலம்பூர், டிச 10 – சுங்கை பீசி – உலு கிளாங் SUKE நெடுஞ்சாலையில்
போலீஸ் தடயயியல் வாகனம் ஒன்று கவிழ்ந்ததைத் தொடர்ந்து இருவர் காயம் அடைந்தனர். மழையின்போது அந்த பிக் அப் வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அந்த வாகனம் தலைகப்புற கவிழ்ந்தது. அந்த விபத்தின்போது சுமார் 30 முதல் 50 வயதுடைய ஐந்து போலீஸ்காரர்கள் அதில் இருந்தனர். காலை 9 மணி அளவில் நடைபெற்ற அந்த விபத்தில் இதர வாகனங்கள் எதுவும் சம்பந்தப்படவில்லை.
காயத்திற்குள்ளான இருவர் வெளிநோயாளியாக அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் வீட்டிற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43-வது பிரிவின் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் அஷாம் இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.