
கோலாலம்பூர், மே-8 – உள்நாட்டு தேவை உள்ளிட்ட நடவடிக்கைகளால் உந்தப்பட்ட தொடர்ச்சியான உலகளாவிய வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி, பேங்க் நெகாரா மலேசியா, முக்கிய வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது.
இன்று நடைபெற்ற மூன்றாவது நாணயக் கொள்கை குழு கூட்டத்தைத் தொடர்ந்து, அந்த மத்திய வங்கி OPR வட்டி விகிதத்தை 3.00 விழுக்காட்டில் நிலை நிறுத்தியது.
நேர்மறையான தொழிலாளர் சந்தை நிலைமைகள், குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட பணவியல் கொள்கை மற்றும் நிதி ஊக்கத்தால் உலகளாவிய வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து வலுப்பெறுமென, பேங்க் நெகாரா கூறியது.
என்றாலும், அமெரிக்காவின் பரஸ்பர வரி அறிவிப்பும் அதற்கான உலக நாடுகளின் பதிலடியும் உலகளாவிய வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தின் மீதான கண்ணோட்டத்தை குறைத்துள்ளது.
வர்த்தக பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட நிச்சயமற்ற தன்மைகள், உலகளாவிய நிதிச் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்திற்கும் வழிவகுக்கும் என்றும் அது கூறியது.
2023 மே முதல் OPR வட்டி விகிதத்தை பேங்க் நெகாரா 3 சதவீதமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.