Latestமலேசியா

அந்நியத் தொழிலாளர்களுக்கான விசா விண்ணப்பம்:செப்டம்பர் 30 வரை நீடிக்கவும் – PRIMAS கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 28 – மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம், PRIMAS மற்றும் 22 அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து அந்நியத் தொழிலாளர்களுக்கான விசா விண்ணப்பத்தை செப்டம்பவர் 30 வரை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

முன்னதாக அந்நியத் தொழிலாளர்களுக்கான விசாவைப் பெறுவதற்கு குடிநுழைவு துறை, எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் அறிவித்திருந்தது.

விண்ணப்பிக்கத் தவறினால் அத்தொழிலாளர்களுக்கான கோட்டா ரத்து செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சு எச்சரித்தது. .

இதனிடையே, அந்நியத் தொழிலாளர்களுக்கான விடிஆர் விசாவுக்கான விண்ணப்பத்தில், திடீரென கொண்டு வரப்படும் இதுபோன்ற முடிவுகள், சேவை, தரம் மற்றும் வணிகம் ரீதியாக பெரும் சிக்கலைகளை ஏற்படுத்துகிறது என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் Govindasamy கூறினார்.

ஆகையால், இந்த விடிஅர் விசா முறைக்கான விண்ணப்பத்திற்கான இறுதி நாளை இன்னும் 6 மாதங்களுக்கு நீடிக்க வேண்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அந்நியத் தொழிலாளர்களுக்கான விடிஆர் விண்ணப்பங்களுக்கான வயது வரம்பையும் 55 வயதாக உயர்த்தவும் PRIMAS தனது கூடுதலான கோரிக்கையையும் முன்வைத்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!