Latestமலேசியா

பிரிக்பீல்ட்ஸில் 9.7 மில்லியன் ரிங்கிட் நகைகள் கொள்ளை உள் ஆட்களுக்கு தொடர்பு இருக்கலாம் – போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஏப் 17 – கோலாலம்பூர் ஜாலான் துன் சம்பந்தன் பகுதியில் ஒரு நகைக்கடையில் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளையில் உள் ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்கும் சாத்தியத்தை போலீசார் மறுக்கவில்லை .

அந்த நகைக் கடையில் நேற்று , கைத்துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் கும்பல் 21 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் வேறொரு வாகனத்திற்குச் சொந்தமானது என்று நம்பப்படும் ஒரு போலிப் பதிவு எண்களைப் பயன்படுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக்‘(Hoo Chang Hook )கூறினார்.

மேலும் விசாரணைக்கு உதவும் வகையில், அசல் பதிவு எண்ணைப் பயன்படுத்திய வாகன உரிமையாளரின் வாக்குமூலங்களையும் தனது தரப்பு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை, புகார்தாரர், கடை உரிமையாளர் மற்றும் 10 ஊழியர்கள் உட்பட மொத்தம் 12 நபர்களின் வாக்குமூலங்கள் விசாரணைக்கு உதவும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கான , சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி ரகசிய கண்காணிப்பு கேமராவின் காணொளி காட்சிகளையும் தங்களது தரப்பு ஆய்வு செய்து வருவதாக Hoo Chang Hook கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!