
ஜோகூர் பாரு, அக்டோபர் 29 – ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா பிந்தி இப்ராஹிம் (Marina Binti Ibrahim) மற்றும் ‘யாயாசன் சுல்தானா ரொகாயா’ அமைப்பின் தலைவர் சுகுமாரன் ராமன் ஆகியோர் தலைமையில் கடந்த அக்டோபர் 25ஆம் திகதி, கலர்ஸ் ஆஃப் இந்தியாவின் சௌதன் இன்டர்நேஷன்ல் தீபாவளி எக்ஸ்போ அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டது.
தீபாவளிக் கொண்டாட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்கள் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகைக்காக மகிழ்ச்சியாகப் பொருட்கள் வாங்க தள்ளுபடிகளுடன் ஜோகூர் பாரு, சுதேரா வணிக மையத்தில் இந்த எக்ஸ்போ நடைபெற்று வருகிறது.
தீபாவளி தயாரிப்புகளுக்கான அனைத்து வகையான பொருட்களையும் நியாயமான விலையில் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் விதமாக இந்தக் கண்காட்சி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
இவ்வேளையில், அதிகாரப்பூர்வ ஊடக நண்பர்களாகச் செயல்பட்ட விஜய் டிவி மற்றும் ஆஸ்ட்ரோவுக்கு அதன் ஏற்பாட்டாளர்களான சத்திய குமரனும் மோகனா செல்வியும் நன்றி தெரிவித்து கொண்டனர்.
நாளையுடன் இந்த எக்ஸ்போ நிறைவடையவுள்ள நிலையில், பொது மக்கள் தீபாவளிக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.