
கோலாலம்பூர், ஜனவரி 2 – வழக்கமாக போலீசாரின் சாலைத் தடுப்பு சோதனை என்றாலே இறுக்கமான முகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த முறை அத்தகைய சோதனையின் போது ஒரு நகைச்சுவை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு போலீசார் மேற்கொண்ட சோதனை நேரத்தில் முயல் காதுகள் போன்ற ‘Helmet’- ஐ அணிந்திருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை கண்டவுடன் போக்குவரத்து போலீஸ் உண்மையிலேயே சிறிது விட்டார்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் போக்குவரத்து போலீஸ் வழக்கம்போல வாகன உரிமம், அடையாள அட்டை போன்றவற்றை கேட்பதைக் காண முடிந்தது. ஆனால், அவரது கண்கள் மட்டும் அந்த ஹெல்மெட்டின் மீது இருக்கும் முயல் காதுகளை விட்டே அகலவேயில்லை. சற்று நகைச்சுவையாக, அவர் உடனே அந்த காதுகளை அழுத்தி பார்த்தபோது அவை சட்டென்று நேராக நின்றன.
இந்த சிரிப்பூட்டும் காணொளி டிக்டாக்கில் தீயாய் பரவி, 90,000-க்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் நூற்றுக்கணக்கான கருத்துகளை குவித்துள்ளது.
அதே காணொளி மலேசிய காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு, நகைச்சுவை பதிவொன்றையும் வெளியிட்டுள்ளனர்.



