
நியூயார்க், மே 9 – நியூயார்க்கில், 70,000-திற்கும் மேற்பட்ட லாலிபாப்களை, 4,200 அமெரிக்க டாலருக்கு, அமேசானில் ஆர்டர் செய்த 8 வயது சிறுவனின் செயலைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை, தனது வங்கி கணக்கை எதார்த்தமாக சரிபார்த்த அவருக்கு இச்செய்தி தெரிய வந்திருக்கிறது. தகவல் அறிந்து அமேசானைத் தொடர்புக் கொள்ள முயற்சிப்பதற்குள், லாலிபாப்கள் அவர் வீட்டிற்கு வந்தடைந்ததை தொடர்ந்து அப்பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
மேலும், கரு ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறினால் (FASD) பாதிக்கப்பட்டி அச்சிறுவனுக்கு, இச்செயலின் தாக்கம் புரியவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்,
தொடர்ந்து, அச்சிறுவனின் தாயார், இத்தகைய சூழல்களை எதிர்கொள்ளும் பெற்றோர்கள், நிதானத்தை தவற விடக்கூடாதென்றும் அறிவுறுத்தியுள்ளார்.