Latestமலேசியா

பத்துமலை திருத்தலத்தில் 140 அடி திருமுருகனுக்கு பன்னீர் அபிசேகம் சிறப்பாக நடைபெற்றது

கோலாலம்பூர், ஜன 1- புத்தாண்டின் முதல் நாளான நேற்று பத்துமலை திருத்தலத்தில் அமைந்துள்ள 140 அடி திருமுருகன் சிலைக்கு 8ஆம் ஆண்டாக பன்னீர் அபிசேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காலை 9 மணிக்கு மேல் நடைபெற்ற சிறப்பு பூசைக்குப் பின் பன்னீர் அபிசேகம் நடைபெற்றது. கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ம.இ.கா-வின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் அழைக்கப்பட்ட சிறப்பு பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இன்று புத்தாண்டை முன்னிட்டு பொது விடுமுறையாக இருந்ததால் பன்னீர் அபிசேகம் நிகழ்ச்சியில் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு பத்துமலை திருத்தலத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்த பூஜைகளில் கலந்துகொண்ட பலர் பன்னீர் அபிசேகத்திலும் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!