
கோத்தா திங்கி,அக் 22 – வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு மணிவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 30 வயதுடைய ஆடவன் கைது செய்யப்பட்டான் என கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரின்டென்டன் யூசோப் ஒத்மான் ( Yusof Othman ) தெரிவித்தார். அந்த சந்தேகப் பேர்வழியிடமிருந்து கை தொலைபேசியும் மற்றும் இரத்தக் கறை படிந்த ஆடையும் பறிமுதல் செய்யப்பட்டது.
எனினும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பதோடு அந்த சந்தேகப் பேர்வழி மதுபோதையில் இருந்தபோது கொலை நடந்துள்ளதாகவும் கடன் விவகாரமே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என நம்பப்படுவதாக தொடக்கக் கூட்ட விசாரணையில் தெரியவந்ததாக யூசோப் கூறினார். விசாரணைக்கு உதவும் பொருட்டு கைதான நபர் ஏழு நாட்களுக்கு தடுத்து
வைக்கப்பட்டுள்ளான் .