Latestமலேசியா

ஆயர் குரோவில் 12 மணி நேர போராட்டதக்கு பின் புதர் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

மலாக்கா, பிப் 14- ஆயர் கெரோ (Ayer Keroh), Taman Muzaffar Heightக்கு அருகே 6.87 ஹெக்டர் (hektar) பரப்பளவில் பரவிய புதர் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட 12 மணிநேரம் கடுமையாக போரடினர்.

மூன்று பகுதிகளில் புதர் தீ ஏற்பட்டதாக மாலை மணி 5.50 அளவில் பொதுமக்களிடமிடருந்து தகவல் கிடைத்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பொது உறவு அதிகாரி சூப்பிரடண்ட் முகமட் ஹிபிட்சாடத்துல் ரஷிட் ( Mohamad Hafidzatullah Rashid ) தெரிவித்தார்.

ஆயர் கெரோ , புக்கிட் கட்டில் (Bukit Katil), மலாக்கா தெங்கா (Melaka Tengah) மற்றும் Tangga Batu தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் 29 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்களும் , இரண்டு டேங்கர்கள் உட்பட 10 தீயணைப்பு வண்டிகள் உதவியுடன் 1.2 ஹெக்டேர் (hektar) பரப்பளவு பகுதியில் ஏற்பட்ட புதர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டனர்.

ஆயர் கெரோ தீயணைப்பு நிலைய இயந்திரத்தின் தண்ணீர் தொட்டியில் இருந்து 152.4 மீட்டர் நீளமுள்ள இரண்டு குழாய் நீரோடைகளைப் பயன்படுத்தி Muzaffar Height அடுக்கு மாடி பகுதிக்கு அருகேயுள்ள மலை உச்சியில் புதர் தீ அணைக்கும் நடவடிக்கைக்கு Tangga Batu தீயணைப்பு நிலையத்தின் வண்டிகள் உதவின.

வறண்ட மற்றும் வெப்பமான வானிலையுடன் , கடுமையான காற்றினால் தீ விரைவாக பரவியதோடு , 6.87 ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவும் வரை அதனை அணைக்க தீயணைப்புத் துறை நீண்ட நேரம் எடுக்க வேண்டியிருந்தது.

Syarikat Air Melaka Berhad இன்று காலை மணி 5.28க்கு தீயணைப்பு நடவடிக்கை முடியும் வரை அருகிலுள்ள தண்ணீர் தொட்டியைத் திறந்து நீர் கிடைப்பதற்கு உதவி செய்ததாக Mohd Hafidzatullah தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!