
தியான்ஜின், செப்டம்பர்-1 – சீனாவின் தியான்ஜின்னில் (Tianjin) நடைபெறும் SCO எனப்படும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட Gala விருந்தில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார்.
தியான்ஜின் மாநாட்டு மையத்தில் அன்வாரையும் டத்தின் ஸ்ரீ Dr வான் அசிசா வான் இஸ்மாயிலையும், சீன அதிபர் சீ சின் பிங் (Xi Jinping) தம்பதியர் எதிர்கொண்டு வரவேற்றனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், இந்திய அதிபர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் Shehbab Shariff, துருக்கிய அதிபர் Recep Tayyip Erdogan உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனர்.
நேற்று தொடங்கி 2 நாட்களுக்கு இம்மாநாடு நடைபெறுகிறது.
ஆசியான் தலைவர் என்ற முறையில் SCO Plus மாநாட்லும் அன்வார் இன்று உரையாற்றுகிறார்.
மாநாடு முடிந்து பெய்ஜிங் செல்லும் பிரதமர் அங்கு முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்கிறார்.