Latestஉலகம்

ஐஸ்லாந்தில் சீற்றத்துடன் வெடித்து சிதறிய எரிமலை; 3 கீலோமீட்டருக்கு பூமியில் பிளவு

ஐஸ்லாந்து, மார்ச் 18 – ஐஸ்லந்தின் ரேய்க்யானஸ் (Rekyjanes) தீபகற்பத்தில் உள்ள எரிமலை முன்தினம் வெடித்து சிதறியது.

கடும் சீற்றத்துடன் வெடித்த எரிமலை குழம்பு, சுமார் 3 கிலோமீட்டர் வரை பூமியை பிளந்து வழிந்தோடியது.

வெடிப்பினால் உண்டான புகை விண்ணை முட்டும் அளவுக்கு பரவியிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 4வது முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது.

இதற்கிடையே எரிமலை வெடிப்புக்கு முன்னதாக வானிலை மையம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் எரிமலை அருகிலுள்ள கிரீண்டாவில் (Grindavik) மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

முக்கிய சுற்றுலா தலமான ப்ளூ லகூன் தெர்மல் ஸ்பாவும் (Blue Lagoon geothermal spa) எரிமலை வெடிப்பை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிமலை வெடிப்பு காரணமாக அருகில் உள்ள கெப்ராவிக் விமான நிலையத்தில், இதுவரை விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் செயல்பட்டு வருகிறது.

தற்போது அதன் நெருப்புக்குழம்பின் பாயும் வேகம் குறைந்துள்ள நிலையில், அதன் காணொளிகள் வைரலாக பரவி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!