
உலு சிலாங்கூர், மார்ச்-2 – உலு சிலாங்கூரில் 2 கோழி அறுக்கும் மையங்களில் Operasi Tegas சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், ஒரு மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
புக்கிட் செந்தோசா, ஜாலான் ஜெஞ்சாரோமில் உள்ள அக்கடையை குறிப்பிட்ட காலத்திற்கு மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், அது தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, 11 எரிவாயு தோம்புகள் உள்ளிட்ட பொருட்கள் சீல் வைக்கப்பட்டன.
இவ்வேளையில் குவாலா குபு பாருவில் சோதனை நடத்தப்பட்ட இரண்டாவது கடையில் கோழி அறுப்புப் பணிகள் முடிவடைந்து அவ்வளாகம் சுத்தமாக இருந்தது.
என்றாலும், அதன் உரிமையாளருக்கு முறையான வியாபார உரிமம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உரிமத்துக்கு விண்ணப்பிக்குமாறு அதன் உரிமையாளர் உத்தரவிடப்பட்டார்.
சிலாங்கூர் சுற்றுச் சூழல் துறை மற்றும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் ஒத்துழைப்புடன், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அச்சோதனைகளை மேற்கொண்டது.