Latestமலேசியா

மலேசியாவின் பிறப்பு விகிதம் 4.5 விழுக்காடு சரிவு: மலேசிய புள்ளிவிவரத் துறை அறிக்கை

கோலாலம்பூர், அக்-15-மலேசியாவில் 2025-ஆம் ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4.5 விழுக்காடு குறைந்து 396,175 ஆகப் பதிவாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் 414,918 குழந்தைகள் பிறந்தன. 2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்தாண்டு பிறப்புகளின் எண்ணிக்கை 18,743 குறைந்துள்ளது மலேசிய புள்ளிவிவரத் துறை (DOSM) வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதனால், மொத்த பிறப்பு விகிதம் 2024-ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 12.2 ஆக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 11.6 ஆகக் குறைந்துள்ளது. மலாய்க்காரர்கள் 14.9 பிறப்புகளுடன் அதிக விகிதத்தையும், சீனர்கள் 5.0 பிறப்புகளுடன் குறைந்த விகிதத்தையும் பதிவு செய்துள்ளனர்.

அதேவேளை, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுக்கான மொத்த கருவுறுதல் விகிதம் 2024-ஆம் ஆண்டில் 1.6 குழந்தைகளாக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 1.5 ஆகச் சரிந்துள்ளது. மலாய்க்காரர்களின் விகிதம் 1.9 ஆகவும், இந்தியர்களின் விகிதம் 1.1 ஆகவும் பதிவாகியுள்ளது. சீனர்களின் விகிதம் 0.9-லிருந்து 0.7 ஆகக் குறைந்துள்ளது.

மாநில அளவில், திரங்கானு 1,000 பேருக்கு 18.7 பிறப்புகளுடன் அதிக பிறப்பு விகிதத்தையும், பினாங்கு 9.3 பிறப்புகளுடன் குறைந்த விகிதத்தையும் பதிவு செய்துள்ளன. கருவுறுதல் விகிதத்தைப் பொறுத்தவரை, திரங்கானு 2.5 குழந்தைகளுடன் முதலிடத்திலும், கிளந்தான் 2.3 குழந்தைகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. பினாங்கு 1.1 குழந்தைகளுடன் மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் இறப்புகளின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 198,992 ஆக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 0.4 விழுக்காடு அதிகரித்து 199,807 ஆக உயர்ந்துள்ளது. பொது இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 5.8 என்ற அளவில் மாற்றமின்றி நீடித்தது. இந்தியர்கள் 8.2 இறப்புகளுடன் அதிக விகிதத்தையும், இதர பூமிபுத்ராக்கள் 5.7 இறப்புகளுடன் குறைந்த விகிதத்தையும் பதிவு செய்துள்ளனர்.

மாநில அளவில், பேராக் 1,000 பேருக்கு 8.2 இறப்புகளுடன் அதிக பொது இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. புத்ராஜெயாவில் இந்த விகிதம் 2.6 ஆக இருந்து, நாட்டிலேயே மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது என DOSM தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!