Latestஉலகம்

முகநூல் பதிவு தொடர்பாக இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி அரேபியா

கொழும்பு, அக்-15-செளதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மதண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக. இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் அத்தகவலைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தூதரக மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் பலனாக அம்முடிவு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

அம்முயற்சிக்கு ஆதரவளித்த செளதி அரேபிய அரசாங்கம், இலங்கைத் தூதர், வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள், இரு நாடுகளின் சட்டக் குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

27 வயதான அனோஜன், கல்முனையைச் சேர்ந்தவர். வேலைக்காக 2025 செப்டம்பர் 4ஆம் தேதி செளதி அரேபியாவுக்குச் சென்ற அவர், முகநூலில் நபிகள் நாயகம் குறித்து வெளியிட்ட கருத்து மதநிந்தனையாகக் கருதப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

முதலில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 லட்சம் செளதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேல்முறையீட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனோஜனின் குடும்பத்தினர் இலங்கை அதிபரைச் சந்தித்து அவரை மீட்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதனை அடுத்து, இலங்கை தனது சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவைச் செளதி அரேபியாவுக்கு அனுப்பி, அந்நாட்டு சட்டக் குழுவினருடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அம்மனுவைத் தொடர்ந்து மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!