
சீனா, ஜூலை 24 – சீனா நகரில் பர்கர் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரி ஒருவர், சமையலுக்குப் பயன்படுத்தும் அதே கத்தியால் தன் கால் முடிகளைச் சவரம் செய்த சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் இல்லாத வேளையில், அவர் சமையல் செய்ய பயன்படுத்திய அதே கத்தியால் தனது கால்களை சொரிந்தது மட்டுமல்லாமல் கால் நகங்களையும் வெட்டிக் கொண்டு பார்ப்பவரை முகஞ்சுளிக்க செய்துள்ளார்.
பொதுவாகவே உணவுச் சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்கள், மிகுந்த கவனத்துடனும் சுத்தத்துடனும் பணிபுரிய வேண்டுமே தவிர, இத்தகைய அருவருக்க தக்க செயலில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.
இந்நிலையில் வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளியைக் கண்ட பொதுமக்கள், அந்நபரின் பொறுப்பற்ற செயலைக் கண்டு தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.