Latestமலேசியா

மலாக்காவில் சீனக் கோவிலில் ‘அல்லாஹ்’ எழுத்து; விசாரணை தொடக்கம்

மலாக்கா, ஏப்ரல்-9-மலாக்கா, ஜாசினில் ஒரு சீனக் கோவிலில் ‘அல்லாஹ்’ மற்றும் ‘பிஸ்மில்லாஹ்’ என்ற ஜாவி எழுத்துகள் காணப்பட்ட சம்பவம், உள்ளூர்
மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jeti Anjung Batu- Pantai Siring பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், சிவப்பு நிறத்திலான அந்தச் சிறிய சீனக் கோவிலை, முதலில் கவனித்ததாகக் கூறப்படுகிறது.

அக்கோவில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அங்கிருக்கும் நிலையில், இந்த ஜாவி எழுத்துகள் நேற்றிரவு முதலே காணப்படுகிறது.

இந்நிலையில், கல்வி, உயர்கல்வி மற்றும் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Rahmad Mariman சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இது மத உணர்வுகளுடன் தொடர்புடைய விஷயம் என்பதால், போலீஸார் மற்றும் மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையான JAIM இணைந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

அதே சமயம், இந்தச் சீனக் கோவில் சட்டப்பூர்வ அனுமதியுடன் கட்டப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடப்பதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!