Latestஉலகம்

பிணையாளிகள் காஸா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட காணொளியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது

டெல் அவிவ், நவ 20 – தென் இஸ்ரேலில் கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் தரப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் பிணையாக பிடித்துச் செல்லப்பட்ட பிணையாளிகள் காஸாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட காணொளி காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. அந்த மருத்துவமனையின் ரகசிய கேமாராவில் அந்த காணொளி காட்சிகள் பதிவாகியுள்ளன. காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையில் அல்-ஷிஃபா மருத்துவமனை முக்கிய அம்சமாக திகழ்கிறது.

ஹமாஸ் தரப்பினர் அந்த மருத்துவமனையை தங்களது நடவடிக்கைக்கு ஒரு தளமாக பயன்படுத்தி வருகின்றனர் என் இஸ்ரேல் தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் அல்-ஷிஃபா மருத்துவமனையை தாங்கள் பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் கூறிவரும் குற்றச்சாட்டை ஹமாஸ் தரப்பினர் மறுத்து வருகிறன்றனர். அக்டோபர் 7ஆம் தேதி காலை மணி 10.33 அளவில் பதிவாகியுள்ள முதலாவது காணொளி காட்சியில், அரைக்கால் காற்சட்டையும் நீல நிற டீ சட்டையையையும் அணிந்திருந்த ஆடவர் ஒருரை ஐந்து ஆடவர்கள் மருத்துவமனையின் நுழைவு மண்டபத்தில் இழுத்துச் செல்வதையும் அவர்களில் மூவர் ஆயுதங்கள் வைத்திருப்பதையும் காணமுடிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!