
நியூ யோர்க், அக்டோபர்-26,உலகிலேயே மிகவும் விலைமதிப்பு மிக்க நிறுவனமாக Apple-லை பின்னுக்குத் தள்ளி சில்லு தயாரிப்பு நிறுவனமான Nvidia முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பங்கு பரிவர்த்தனையில் அந்நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத உயர்வைப் பதிவுச் செய்ததை அடுத்து, முதலிடம் சாத்தியமானது.
நியூ யோர்க் பங்குச் சந்தையில் நேற்று Nvidia-வின் பங்கு மதிப்பு சற்று நேரத்திற்கு 3.53 ட்ரில்லியன் லாடராக உயர்ந்தது.
iPhone தயாரிப்பு நிறுவனமான Apple-லின் பங்கு மதிப்பு அப்போது 3.52 ட்ரில்லியனாக பதிவாகி இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டது.
Nvidia பிரத்தியேகமாகத் தயாரிக்கும் AI சில்லுகளுக்கான தேவை சந்தையில் பன்மடங்கு அதிகரித்து வருவதும் அதற்குக் காரணமாகும்.
AI கணினியியல் துறையில் பயன்படுத்தப்படும் செயலிகள் தயாரிப்பில் மேலாதிக்கம் செலுத்தி, Microsoft, Alphabet, Meta போன்ற பெருநிறுவனங்களை விட Nvidia முன்னணியிலிருக்கிறது.
இதே போல் கடந்த ஜூன் மாதமும் Microsoft, Apple ஆகிய இரு நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி, கொஞ்ச நேரத்திற்கு உலகின் மிக விலைமதிப்புமிக்க நிறுவனமாக Nvidia பெயர் பதித்தது.
பங்குச் சந்தையில் Nvidia, Microsoft, Apple ஆகிய முப்பெரும் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களுகிடையில், கடந்த சில மாதங்களாகவே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.