Latestமலேசியா

போலீஸ் அதிரடியில் கார் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூவர் ரவாங்கில் சுட்டுக் கொலை

ரவாங், ஜனவரி-19, கார் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூவர் சிலாங்கூர், ரவாங் Persiaran Kota Emerald சாலையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று நண்பகல் 12 மணி வாக்கில் அம்மூவரும் பயணித்த Toyota Vios காரை அடையாளம் கண்டு கொண்ட போலீஸ் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றது.

எனினும் போலீஸுடான் ஒத்துழைக்காமல் தப்பியோடும் முயற்சியில் போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

சுமார் 750 மீட்டர் தூரம் விடாமல் துரத்திச் சென்ற போலீஸார் மூவரையும் சுட்டுக் கொன்றனர்.

இருவர் முறையே 40,43 வயது உள்ளூர் ஆடவர்கள் என அடையாளம் காணப்பட்டது.

இன்னொருவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

காரை வாடகைக்கு எடுத்து, போலி பதிவு எண் பட்டையை மாட்டி திருட்டில் ஈடுபடுவதே அக்கும்பலின் யுக்தியாகுமென, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஷுஹாய்லி மொஹமட் சேய்ன் (Datuk Seri Mohd Shuhaily Mohd Zain) கூறினார்.

சம்பவத்தின் போது அவர்கள் பயன்படுத்தியது கூட வாடகைக் கார் தான்; இன்னொரு திருட்டில் ஈடுபட செல்லும் போது தான் போலீஸிடம் சிக்கியதாக அவர் சொன்னார்.

பெரும்பாலும் 4 சக்கர வாகனங்களைக் குறி வைத்து 2018 முதல் செயல்பட்டு வரும் அக்கும்பல், இவ்வாண்டில் இதுவரை மட்டுமே 4 மாநிலங்களில் 17 வாகனங்களைக் களவாடியுள்ளது.

திருடியக் கார்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி விற்றும் வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!