Latestமலேசியா

தாய்லாந்தில் முதலீட்டு மோசடி கும்பல் முறியடிப்பு ; இரு மலேசியர்களும் கைது

பேங்கோக், மார்ச்-13, முதலீட்டு மோசடி கும்பலொன்றை முறியடித்துள்ள தாய்லாந்து போலீஸ், இரு மலேசியர்கள் உள்ளிட்ட 9 பேரைக் கைதுச் செய்துள்ளது.

அவர்களில் ஒருவரான 42 வயது ஆடவர் மார்ச் 6-ஆம் தேதி சொங்லாவில் போலீசிடம் சிக்கினார்.

மற்றொருவனான 26 வயது இளைஞன் மறுநாள் மார்ச் 7-ஆம் தேதி தாய்லாந்து நாட்டு காதலியுடன் பேங்கோக்கில் பிடிபட்டான்.

அவன் ஏற்கனவே மலேசியாவில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவன் என தெரிய வந்துள்ளது.

கைதானவர்கள், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா என எல்லை கடந்த பெரும் முதலீட்டு மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அந்த மோசடி கும்பல், 5 பில்லியன் Baht அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு 65 கோடியே 79 லட்சம் பணத்தோடு கைவரிசை காட்டி கரும் கட்டமைப்பு என தாய்லாந்து பொருளியல் குற்றத் தடுப்புப் பிரிவின் தலைவர் சொன்னார்.

பெரும்பாலும் பெண்களை குறி வைத்தே இதுவரை 50-கும் மேற்பட்டோரிடம் பெரும் பணத்தை அக்கும்பல் மோசடி செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பலர், மோசடி என தெரியாமல், ஒரே நேரத்தில் ஒன்றரை கோடி Bhat பணத்தை பரிமாற்றம் செய்து ஏமாந்துப் போயிருக்கின்றனர்.

இவ்வேளையில்
அவ்விரு மலேசியர்களும், மோசடி மற்றும் இணையக் குற்றம் தொடர்பில் தாய்லாந்து நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!