
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-25 – KLIGA எனப்படும் கோலாலாம்பூர் இந்தியர் கோல்ஃப் விளையாட்டாளர்கள் சங்கம் அண்மையில் 13-ஆவது முறையாக KLIGA Masters கோல்ஃப் போட்டியை நடத்தியது.
Templer Park Country & Colf Club மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் 140 போட்டியாளர்கள் பங்குகொண்டனர்.
ஆண்டுக்கொரு முறை உறுப்பினர்களைக் கொண்டாடும் நோக்கிலும், சங்கத்திற்கு நன்கொடை திரட்டவும் இப்போட்டி நடத்தப்பட்டதாக, அதன் தலைவர் கேப்டன் Dr கே. திரு வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
கோல்ஃப் விளையாட்டு மட்டுமின்றி சமூகக் காரியங்கள், ஜூனியர் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றையும் இச்சங்கம் செய்து வருகிறது.
இந்நிலையில், புதியத் திட்டமாக கூட்டரசு பிரதேசத்தில் தமிழ்ப் பள்ளியொன்றை தத்தெடுக்கவும் முடிவுச் செய்துள்ளதாக அவர் சொன்னார்.
ஆதரவாளர்கள் துணையுடன் நன்கொடை திரட்டலின் இலக்கு அடைந்திருப்பதாகவும் திரு மகிழ்ச்சியுடன் கூறினார்.
தத்தெடுப்புத் திட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் தமிழ்ப் பள்ளிகள் தங்களைத் தொடர்புக் கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.
கோல்ஃப் விளையாட்டை ஊக்குவிக்கும் அதே வேளை, சமூகக் காரியங்களுக்கும் தன்னால் ஆனதை இந்த KLIGA சங்கம் ஆண்டுதோறும் செய்து வருவது பாராட்டுக்குரியது.