
பினாங்கு, ஜனவரி 21 – வரவிருக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் தூய்மைப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளன.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB), கோயில் நிர்வாக குழுவினர், சமூக நல அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் இணைந்து ஆலயத்தை முழுமையாகச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுப்பட்டனர்.
இதில் மரங்களை வெட்டுதல், ஆலயப் படிகள் மற்றும் ஆலய உபகரணங்களைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேலைகளில் அனைவரும் மும்முரமாகச் செயல்பட்டனர்.
இந்தச் செயற்பாட்டில், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடளுமன்ற உறுப்பினருமான ஆர்எஸ்என் ராயர் மற்றும் செனட்டார் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் நேரில் பங்கேற்று, தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
இந்த தூய்மைப்படுத்தல் முயற்சியின் மூலம், இந்த ஆண்டின் தைப்பூசம் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்களை வரவேற்க ஆலயத்தினர் தயாராகிவிட்டனர்.
சமூக ஒற்றுமையை ஊக்குவிப்பதோடு, எதிர்கால சந்ததிகளுக்காக புனித இடங்களை பாதுகாக்கும் முயற்சியாகவும் இச்செயல் அமைந்தது எனலாம்.