Latestமலேசியா

கியர் தவறாக போடப்பட்டதால் SUV வாகனம் கடையை மோதியது

மலாக்கா, ஜூன் 3 – தவறான கியர் போடப்பட்டதன் காரணமாக வயதான ஒருவர் ஓட்டிச் சென்ற SUV வாகனம் , இன்று காலை தாமான் மலாக்கா ராயா , ஜாலான் மெர்டேகாவில் உள்ள ஒரு கடையின் பின்புறத்தில் மோதியது. காலை 8 மணியளவில் நடந்த அந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 70 வயது குடும்ப மாறுவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ்தலைவர் துணை கமிஷனர் கிறிஸ்டோபர் பாடிட் ( Christophwe Patit ) தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு உணவகத்திற்குச் செல்லவதற்காக , ​​வாகன நிறுத்துமிடத்திற்குள் பின்னோக்கிச் செல்ல முயன்றபோது, அவர் தவறுதலாக D கியரை மாற்றியதால், அவர் ஓட்டி வந்த Volvo XC60 SUV வாகனம் முன்புறம் சென்றது. இதன் விளைவாக, இதற்கு முன் வழக்கறிஞர் அலுவலகமாக இருந்த அந்த வளாகத்தின் பின்புற சுவரில் SUV மோதியதில் காலி செய்யப்பட்டிருந்த அந்த கடைச் சுவர் உடைந்து சேதமடைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!