Latestமலேசியா

புறக்கணிப்பு பிரச்சாரத்தின் மீது மெக்டொனால்ட் மலேசியா வழக்குத் தொடர எவ்வித காரணமும் இல்லை

கோலாலம்பூர், ஜன 1 – காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட புறக்கணிப்பு பிரச்சாரம் தொடர்பாக மலேசியா புறக்கணிப்பு, விலக்கல், தடைகள் (BDS இயக்கம்) மீது வழக்குத் தாக்கல் செய்ய மெக்டொனால்ட் மலேசியாவுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

BDS இயக்கம் அந்த துரித உணவு நிறுவனத்திற்கு எதிராக நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை, மாறாக மலேசியர்களால் தொடங்கப்பட்ட புறக்கணிப்புக்கு ஒப்புதல் அளித்தது என அரசு சார்பற்ற அமைப்பின் தலைவர் பேராசிரியர் டாக்டர் முகமது நசாரி இஸ்மாயில் தெரிவித்தார்.

BDS மலேசியா இணையதளத்தை பார்த்தால், நாங்கள் உண்மையில் இந்தப் புறக்கணிப்புக்காக பிரச்சாரம் செய்யவில்லை. மலேசிய மக்கள்தான் இதைப் புறக்கணிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

நேற்று கோலாலம்பூரில் ஆறு நாள் பாலஸ்தீன முற்றுகைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக முகமது நசாரி  செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார். மெக்டொனால்ட் சமீபத்தில் இஸ்ரேல் ஆயுதப் படைகளின் உணவுகளுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அந்த துரித உணவுச் சங்கிலியைப் புறக்கணிப்பதற்கான இயக்கம் பெருகியதாக அவர் கூறினார்.

வழக்குடன் தொடர்புடைய சட்டச் செலவுகளைக் கட்டுப்படுத்த நிதி திரட்டும் பிரச்சாரத்தை நடத்துவதையும் BDS பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.
இது குறித்து முதலில் எங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசிப்போம் என்றார்.

தங்களை இழிவுபடுத்தியதாகக் கூறி மெக்டொனால்ட் மலேசியா வழக்குத் தொடுத்துள்ளதாக வெள்ளிக்கிழமையன்று BDS அரசு சார்பற்ற அமைப்பு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!