Latestமலேசியா

உலகப் போட்டித் தன்மைப் பட்டியலில் 23-ஆவது இடத்திற்கு முன்னேறிய மலேசியா

கோலாலம்பூர், ஜூன்-17 – 2025-ஆம் ஆண்டுக்கான உலகப் போட்டித்தன்மை வரிசையில் மலேசியா 11 இடங்கள் முன்னேறி 23-அவது இடத்தைப் பிடித்துள்ளது.

69 நாடுகளைக் கொண்ட அப்பட்டியலில் கடந்தாண்டு மலேசியா 34-ஆவது இடத்திலிருந்தது.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சான MITI அதனைத் தெரிவித்துள்ளது.

நீண்ட கால வளப்பத்தை உறுதிச் செய்யும் வணிக நட்பு சூழலை உருவாக்கி அதனைப் பராமரிக்கும் திறன் அடிப்படையில், நாடுகளை மதிப்பிடும் இந்த வருடாந்திர தரவரிசை சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

இந்த தரவரிசையானது 2020 முதல் நாட்டின் சிறந்த அடைவுநிலையாகும்; இது மலேசியாவின் பொருளாதார மீட்சி மற்றும் சீர்திருத்தத்தின் முற்போக்கான வேகத்தை பிரதிபலிப்பதாக MITI கூறியது.

மடானி பொருளாதார கட்டமைப்பின் கீழ் வைக்கப்பட்ட இலக்கின் படி, 2033-ஆம் ஆண்டுக்குள் போட்டித்தன்மை வாய்ந்த உலகின் முதல் 12 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதற்கான அதன் பாதையை இது மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

பொருளாதார அடைவுநிலை, அரசாங்க மற்றும் வணிகத் திறன்கள் நாட்டின் ஒட்டுமொத்த போட்டித்தன்மையை உந்தச் செய்துள்ளன.

பொருளாதார அடைவுநிலையில் கடந்தாண்டு உலகளவில் 8-ஆவது இடத்திலிருந்த மலேசியா இவ்வாண்டு 4 இடங்கள் முன்னேறியுள்ளது.

அதே சமயம் அரசாங்க செயல்திறன் மற்றும் வணிக செயல்திறனிலும் 8 இடங்கள் மேம்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!