
சிங்கப்பூர், மார்ச்-8 – Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிக்கு, சிங்கப்பூர் பிரதமர் மீண்டும் ஆளாகியுள்ளார்.
Deepfake முறையில் லாரன்ஸ் வோங்கின் முகத்தைப் போன்று மாற்றியமைக்கப்பட்ட வீடியோ வாயிலாக, பொருள் மற்றும் சேவைகள் விளம்பரப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பணம் சம்பாதிக்கும் திட்டம், நிரந்த வசிப்பிடத் தகுதிக்கான விண்ணப்பச் சேவையும் அவற்றில் அடங்கும்.
இம்மோசடிகள் குறித்து கவனமாக இருக்கும்படி, சிங்கப்பூர் மக்களுக்கு அவரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Deepfake வீடியோ என தெரியாமல், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட சுய விவரங்களை பகிர வேண்டாம்; சந்தேகம் வந்தால் உடனடியாக ScamShield இணையத் தளத்தில் புகாரளிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
எதையும் எளிதில் நம்பி ஏமாந்து விட வேண்டாம்; அப்படி ஏமாந்திருந்தால் போலீஸில் புகாரளிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
லாரன்ஸ் வோங்கின் முகம் deepfake மூலம் மோசடிக்கு பயன்படுத்தப்படுவது இது முதன் முறையல்ல.
2023-ல் அவர் துணைப் பிரதமராக இருந்த போதே, போலி முதலீட்டுத் திட்டத்திற்கு அவரின் முகத்தை மோசடிக்காரர்கள் பயன்படுத்தியுள்ளனர்.