
ஈப்போ, அக்டோபர்-9,
தேசிய தின அணிவகுப்பின் போது பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவை நெருங்கி அவரைத் தாக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில், சம்பந்தப்பட்ட பெண் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை ஈப்போ மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேடையில் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டதை Nurshazwani Afni முன்னதாக ஒப்புக் கொண்டிருந்தார்.
எனினும், அவர் schizophrenia எனப்படும் ஒரு வகை மனக்கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவத்தின் போது அவரின் மனநிலை சீராக இல்லை என்றும் மருத்துவ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், நீதிமன்றம் அம்மாதுவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்கவில்லை.
குற்றம் நிகழ்ந்த போது அவரது மனநிலை எப்படி இருந்தது என்பது முக்கியமாகும்; எனவே தனது செயல்களுக்கு அம்மாது முழுமையாகப் பொறுப்பேற்க முடியும் என நீதிமன்றத்தால் தீர்மானிக்க முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவரின் மனநிலையை மதிப்பிட மேலும் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அதன்பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கை முடிவாகும் என்றார்