
கோத்தா பாரு, ஜனவரி-18-கிளந்தான், பாச்சோக்கில் குடும்ப தின நிகழ்ச்சியில் நடந்த சோகமான விபத்தில், 4 வயது பெண் குழந்தை தீயணைப்பு துறையின் MPV வாகனத்தால் மோதப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறது.
Nurul Afia Raisha Muhamad Shamsul 2 வாரங்களாக குபாங் கெரியான் HUSM மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம், வலது தோள் எலும்பு முறிவு மற்றும் சில விலா எலும்புகள் முறிவு ஆகியவற்றால் அக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சுப் பகுதியில் 3 சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இலேசான முன்னேற்றம் தெரிந்தாலும், குழந்தை இன்னும் அபாயக் கட்டத்திலிருந்து வெளியேறவில்லை என அதன் பெற்றோர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஜனவரி 3-ஆம் தேதி காலை 10.45 மணியளவில், பாச்சோக்கில் உள்ள மக்கள் விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்தது.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, பின்னால் riverse செய்த MPV வாகனம் மோதியது.
போலீஸில் புகார் செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.



